என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Friday, December 19, 2003

அம்மாவின் மடியாய்

மழைத் தாரை ஈரம் பட்டு
சுவற்றில் படர்ந்த பாசி

காய்ந்து நிற்கும் கொம்பைச் சுற்றி
இழைந்து நிற்கும் கொடி

நீர் சுமந்து களைத்தபடி
மெல்ல நகரும் மேகம்

சிறகசைத்து மிதந்து செல்லும்
சாம்பல் நிற பறவைக் கூட்டம்

குனிந்து தலையாட்டிக் கொண்டு
கொட்டிலடையும் மந்தை

புறங்கையில் கண் துடைத்து
கலைந்த மயிரை சிலுப்பிக் கொண்டு
களைத்துத் திரும்பும் பள்ளிச் சிறுவன்

சுவரோரம் முதுகு உரசி
சோம்பல் முறித்து நகரும் பூனை

கட்டிக்கொண்ட முழங்காலில்
பதித்துக் கொண்ட கன்னம்

சோர்ந்த மனதுக்கு
சுகமாகத்தான் இருக்கின்றன....
பதிவுகளும் படிமங்களும்.....

Powered by Blogger