என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Friday, September 08, 2006

'இருப்பி'ற்கான போராட்டம்

காலையில்
படிக்க இருக்கட்டுமென்று
பக்கமாய் நகர்த்திப் போட்ட
காலி மேசை மேல்
மாலைக்குள்இடம்பிடித்திருந்தன
மடித்த துணிகள்
அன்றைய தினசரி
எழுதுமை புட்டி
அமிர்தாஞ்சன் குப்பி
உதிர்ந்த பூக்கள்
தபால் உறை
நூலிழை அறுந்த மின்விளக்கு
திருப்புளி
கிறுக்கிய தாள்கள்
இசைப்பெட்டி
இஸ்திரிப் பெட்டி.....
எனைப் பார்த்து முறைத்தபடி!

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Powered by Blogger