என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Monday, October 23, 2006

பொய்களா இவைகள்



“சௌக்கியமா”
“நான் சௌக்கியந்தான்”
“பரீட்சை நல்லாத்தான் செஞ்சிருக்கேன்”
“நம் காதலுக்கு முன் எதுவும் பெரிதில்லை”
“மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு”
“எனக்கு ரொம்ப இளகிய மனசு”
“பணம் பெரிதில்லை”
“நான் பொய் சொல்வதில்லை”
“உன்னை எப்போதோ மறந்து விட்டேன்”
“ஓ இப்போதுதான் ஞாபகம் வருகிறது”
“சொந்தங்கள் சுகமானவை”
“வயதாவது ஒன்றும் வருந்தத் தக்கதில்லை”
“மரணத்தைக் கண்டு பயமொன்றுமில்லை”

வாழ்க்கையில் இப்படி
அவ்வப்போது என்னால் சொல்லப்பட்ட
முழுக்க நிஜமில்லாத
இது போன்ற கொஞ்சம் வார்த்தைகள்
பொய்களில் சேருமா

5 Comments:

At 1:15 AM, Blogger ஜயராமன் said...

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

"உங்கள் பதிவு மிகவும் அழகாக நன்றாக இருக்கிறது"

நன்றி

 
At 5:33 AM, Blogger பாலராஜன்கீதா said...

வள்ளுவர்தான் "பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்று எழுதியிருக்கிறாரே.

 
At 12:08 AM, Blogger தேவமகள் said...

உங்கள் வருகைக்கு நன்றி ஜயராமன் அவர்களே!

"உங்கள் பதிவு மிகவும் அழகாக நன்றாக இருக்கிறது"

இதை நான் சேர்த்துக் கொண்டால் உங்கள் பதிவிற்கான என் (பொய்கள்?!) வார்த்தைகளாகி விடாதோ!!!!

பாலா அவர்களே
என் தோழி இதைப் படித்துவிட்டு நான் ஒரு நாவலையே இதில் அடக்கி விட்டதாக சொல்லிச் சிரிக்கிறாள். நீங்களோ உங்கள் அருமையான விளக்கத்தை வள்ளுவரை வேறு மேற்கோள் காட்டி ஒற்றை வரியில் தீர்த்து விட்டீர்கள்.( ஈரடி செய்யுளை ஓரடி உரைநடையாய் சொன்னதில் தவறொன்றுமில்லையே!)

 
At 12:17 AM, Blogger Chandravathanaa said...

உதயா
இவைகள் பொய்கள்தான் என்றாலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத பொய்கள்.

 
At 3:28 AM, Blogger தேவமகள் said...

ஆமாம் சந்திரா!
இது போன்ற சில பொய்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவையாகிப்போய் விடுகின்றன..!
இவைகளால் வாழ்க்கை மாறி... பாதைகள் மாறி, உடன் பயனிப்பவர்கள் மாறி....

இந்த பொய்கள் வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனைகளாகக் கூட போய்விடுகின்றன! என்றாலும் நீங்கள் சொல்லியபடி யாருக்கும் தீங்கு விளைவிக்காத பொய்கள்( சில சமயங்களில் சொல்பவர்களைத் தவிர) இல்லையா தோழி!

 

Post a Comment

<< Home

Powered by Blogger