என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Friday, September 22, 2006

மறைக்கப்பட்ட உண்மைகள்

பெரியோர்கள்
மகான்களின்
பிறந்த தினங்களில்
நினைவு தினங்களில்
நம் நினைவுக்கு வருவது
அவர்களைவிட
அன்றைய விடுமுறை தினமும்
அது சார்ந்தத் திட்டமிடல்களுமே

திருமணங்களில்
மணமக்களை
வாழ்த்திச் செல்பவர்களை விடவும்
கணக்கு வைத்து
கணக்குத் தீர்த்து
வந்திருப்போரோடு உறவைப் புதுப்பித்துக்
கலைபவர்களே அதிகம்

கடவுளர்களின் எண்ணிக்கை
பெருக்கிப் போனதால்
பக்தியும் நீர்த்துப் போய்விட
பண்டிகைகள்
நமக்கோ செலவுதினம்
சார்ந்திருப்போர்கோ
வரவு தினம்

நமக்கெல்லாம்
புத்தாண்டு பிறப்பது
ஆண்டுயர்வு நாளில்

காதலராய் இருந்தபோதோ
இருவரின் பிறந்த நாட்கள்
வேரெவருடையதையும் விட
புனித நாட்கள்

பெற்றோரானதும்
கருவில் சுமந்து
காத்திருந்து பெற்ற
நம் குழந்தைகளின்
பிறந்த நாட்களை விடவும்
வேறு யார் பிறப்பில்
பொங்கும் பூரிப்பு

எம் தாய் தந்தையர்
விழிமூடித் துயின்று
குழிமூடப் பிரிந்த நாளில்
உயிர் தவிக்க
அந்த கணம் உணர்ந்த
வெறுமையும் தனிமையும்
நினைவில் உறைந்து போக
மனம் உணரும்
அவர்தம் நினைவுநாளை விட
வேறு எவருடைய நினைவுநாட்கள்
எம்மை அதிக துயரத்தில்
ஆழ்த்திவிட முடியும்

மனசாட்சிகள்
மறைத்து வைத்திருக்கும்
விழாக்களையும்
வைபவங்களையும் பற்றிய
மறைக்கப்பட்ட உண்மைகளின் பட்டியல்
இப்படித்தான் நீளுகிறது!

5 Comments:

At 6:01 AM, Anonymous Anonymous said...

நல்லா இருக்கு.
:)

 
At 11:05 PM, Blogger தேவமகள் said...

வாங்க வாங்க பாரி! நலமா? இந்தப் பக்கம் வந்ததற்கும் உங்கள் ஒற்றைச் சொல்லுக்கும் நன்றி!!!

 
At 12:26 PM, Blogger Chandravathanaa said...

நன்றாயிருக்கிறது உதயா.
நிதர்சனமான வரிகள்

 
At 9:36 PM, Blogger meenamuthu said...

ஆழ்ந்த பார்வை!அருமை உதயா!

 
At 11:05 PM, Blogger தேவமகள் said...

நன்றி தோழி சந்திரவதனா!
வங்க மீனா! நலமா? எத்தனை நாட்களாகின்றன உங்களைப் பார்த்து ம்ஹூம் படித்து! நன்றி தோழி!

 

Post a Comment

<< Home

Powered by Blogger