என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Thursday, September 07, 2006

இதைச் சொல்லியே ஆகவேண்டும்

மகனுக்குத் தெரிந்த பையன்; தினேஷ் குமார் என்று பேர்;
+2 மாணவன்; கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண்
எடுத்திருக்கிறான். பெற்றோர் திட்டியதால் நான்கு நாட்களுக்கு
முன் வீட்டில் தனியாயிருக்கும் போது தற்கொலை
செய்து கொண்டான்.

இப்படி ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
அருகில் தெரிந்தவர்களுக்கு நேரும்போது பாதிப்பின்
வீச்சு நம்மை அதிகமாய்தான் தாக்குகிறது.
இதில் குற்றவாளி என்று யாரைத் தீர்ப்பிடுவது.

ஜெயந்தி எழுதிய 'பந்தயக்குதிரைகள்' கதையில் சொல்லப்படுவது மாதிரி............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே!
அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.............என்பதான இந்த பெற்றோர், ஆசிரியர்களின்
மனப்பாங்கு அதிர்சியாகத்தான் இருக்கிறது.

சில பள்ளிகளில் இந்த பத்தாவது, +2 பயிலும் மாணவர்களை இவர்கள் நடத்தும் விதம்..... இவர்கள் மனிதப் பிறவிகளா அல்லது
நிரலி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கணிணிகளா
என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!

பேரசைபிடித்த இவர்களின் தீவிரத்தால்தான்
உணர்வுகளும், சுதந்திரமும், இயற்கை சார்ந்த ஈடுபாடும்,
உறவுகளும் நிறைந்த மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம் சத்தமிலாமல் மெள்ள பிறந்து கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு மனதை சோகமாக்குகிறது.

4 Comments:

At 9:45 PM, Blogger இராம. வயிரவன் said...

உண்மைதான். பிள்ளைகளுக்கு ஊட்டப்படும் "ஒவெர்டோஸ்" கல்வி எங்கு போய் முடியுமோ? இன்றைய வாழ்க்கையின் வேகம் அச்சுறுத்துகிறது.

-வயிரவன்

 
At 4:33 AM, Blogger பத்மா அர்விந்த் said...

பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை திணித்து emotional blackmail செய்வதும், ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதும் ஒருவருக்கொருவர் மதிப்பெண் வகையில் மட்டுமே போட்டி போடுவதும் தவறு என்பதும் உணராவிட்டால் சிறுவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். இதைவிட பெரிய வருத்தம் குழந்தைகளுக்கும் stress வரும் என்பதை புரிந்துகொள்ள தவறூம் பெற்றோர்கள் அதை தெரிந்தாலும்நிராகரிப்பில் இருப்பதும் தான். மீண்டும் பதிய வந்தமைக்கு வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

 
At 10:18 AM, Blogger உதயச்செல்வி.த said...

உண்மைதான் வைரவன். பத்மா!
என் ஒரு தோழியின் மகனிடம் அவனின் வகுப்பு ஆசிரியையை நினைவுபடுத்தினாலே பதட்டம் வரும் அளவுக்கு மன அழுத்தம்.

இன்னொரு தோழி உடம்பு சரியில்லாமல் வீட்டில் விடுப்பில் இருக்கும் மகனிடம், வரும் தேர்வுக்கான பௌதிக பாடத்தை எப்படியாவது படித்து முடித்து விடும்படி சொல்லிவிட்டு வந்திருப்பதாய் அலுவலகத்தில் வந்து சொல்கிறார்.

 
At 7:31 AM, Blogger நிலவு நண்பன் said...

//............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே!
அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.......//

ம் முற்றிலும் உண்மைதான் .

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Powered by Blogger